ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்

author img

By

Published : Feb 4, 2020, 8:55 AM IST

ஈரோடு: ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்பகுதியில் வாகனங்களை இயக்கிச் செல்கின்றனர்.

The wiring in the breakdown
The wiring in the breakdown

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஆசனூர், மாவள்ளம், கோட்டாடை, கெத்தேசால், கேர்மாளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு பண்ணாரி அருகே ராஜன்நகர் துணைமின் நிலையத்திலிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மின்கம்பங்கள் அமைத்து மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

திம்பம் அடுத்துள்ள சீவக்காய் பள்ளம் அருகே சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தின் நடுவே உடைந்து ஒருபக்கம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து சாலையில் விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசனூர் மலைப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் 4 அரசு ஊழியர்கள் கைது

Intro:Body:tn_erd_04_sathy_eb_post_vis_tn10009

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஆசனூர், மாவள்ளம், கோட்டாடை, கெத்தேசால், கேர்மாளம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு பண்ணாரி அருகே ராஜன்நகர் துணைமின்நிலையத்திலிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மின்கம்பங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. திம்பம் அடுத்துள்ள சீவக்காய் பள்ளம் அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தின் நடுவே உடைந்து ஒருபக்கம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து சாலையில் விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசனூர் மலைப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.