ETV Bharat / state

கடம்பூர் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து

author img

By

Published : Feb 28, 2020, 12:31 PM IST

ஈரோடு: கடம்பூர் மலைப்பாதையில் கரும்பு ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Sugarcane truck crashes into Kadampur mountain pass
Sugarcane truck crashes into Kadampur mountain pass

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இம்மலைப் பகுதியில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியிலிருந்து கரும்பு ஏற்றி வந்த லாரி சத்தியமங்கலத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைக்குச் செல்வதற்காக கடம்பூர் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.

லாரி கவிழ்ந்து விபத்து
லாரி கவிழ்ந்து விபத்து

அப்போது மலைப்பாதையின் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப்பாதை ஓரத்தில் இருந்த பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து கடம்பூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கோழிக்கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரி - மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.