ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது!

author img

By

Published : Nov 5, 2019, 5:46 PM IST

ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துனர். அவர்களிடம் இருந்து 194 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மது கைப்பற்றல்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கோபி மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரோந்து சென்ற காவல் துறையினர் உணவகத்தில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது உணவக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 194 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. காருடன் அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் உணவகம் நடத்தி வரும் சத்தியமங்கலம் திருநகர் காலணியைச் சேர்ந்த கர்ணன், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் உணவகத்தில் மது விற்பனை செய்வதற்காக மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக உணவகத்தில் மது விற்பனை செய்யும் காட்சி

இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உணவகத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உணவகத்தில் மது விற்பனை செய்யும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உணவக ஊழியர் மது கேட்பவர்களுக்கு பாட்டில்களில் மதுவை ஊற்றி கொடுப்பதோடு மது அருந்துவதற்காக பிளாஸ்டிக் டம்ளர்களையும் தரும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: அதீத மது... விபரீத ஆசை...! - தத்தளிக்கும் கப்பல் கேப்டன்

Intro:Body:tn_erd_02_sathy_illegal_licker_vis_tn10009

சத்தியமங்கலத்தில் உள்ள உணவகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது. 194 மது பாட்டில்கள் பறிமுதல். உணவகத்தில் மது விற்பனை செய்யும் பரபரப்பு வீடியோ

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உணவகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சத்தி கார்டன் ரெஸ்டாரன்ட் உணவகத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற மதுவிலக்கு போலீசார் உணவகத்தில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது உணவக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 194 மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டனர். இதுகுறித்து உணவகம் நடத்தி வரும் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்த கர்ணன், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய இருவரிடம் விசாரித்தபோது உணவகத்தில் மது விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மதுபான பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். உணவகத்தில் மது விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உணவகத்தில் மது விற்பனை செய்யும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உணவக ஊழியர் மது கேட்பவர்களுக்கு பாட்டில்களில் மதுவை ஊற்றி கொடுப்பதோடு மது அருந்துவதற்காக பிளாஸ்டிக் டம்ளர்களையும் தரும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.