ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை - 48 மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறை

author img

By

Published : Jan 9, 2023, 12:32 PM IST

Updated : Jan 9, 2023, 12:42 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் 48 மணி நேரம் போராடி மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.

48 மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறையினர்
Etv Bharatஊருக்குள் புகுந்த ஒற்றை யானை - 48 மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறையினர்

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை - 48 மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறை

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானை 48 மணி நேர போராட்டத்துக்கு இன்று(ஜன.9) அதிகாலை பண்ணாரி காட்டுக்குள் விரட்டப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை காவிலிபாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநர் கிருபா சங்கர் தலைமையிலான வனபாதுகாப்பு படையை சேர்ந்த 60 பேர் யானை இருக்கும் கரும்புகாட்டை இடத்தை ட்ரோன் மூலம் கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து கரும்பு காட்டை சுற்றிலும் வனத்துறையினர் நிறுத்தப்பட்டு அன்றிரவு யானையை துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.

யானை பயணிக்கும் வழித்தடத்தில் பொதுமக்கள் நிற்க வேண்டாம் என்று 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் யானையை மெல்ல மெல்ல விரட்டி 7ஆம் தேதி அதிகாலை சத்தியமங்கலம் இக்கரை நெகமம் பவானி ஆற்றறங்கரையோரம் கொண்டுவந்தனர். பவானி ஆற்றில் இறங்கிய யானை அங்குள்ள கரும்புக்காட்டுக்குள் புகுந்தது.

யானையை பட்டாசு வெடித்து வனத்துறையினர் துரத்தினர். அப்போது பட்டாசு வெடித்ததில் கரும்புகாட்டு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். வனத்துறையினர் யானை செல்லும் வழிதடத்தில் இடையூறு ஏற்படுத்தும் கிராமமக்களை அப்புறப்படுத்தியதால் 48 மணி நேர போராட்டத்துக்கு பின் 30 கிமீ தூரத்தில் உள்ள பண்ணாரி காட்டுக்குள் யானை விரட்டப்பட்டது.

இதுகுறித்து விளாமுண்டி வனச்சரக அலுவலர் செங்கோட்டையன் கூறுகையில், வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் வனத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. அப்போது கிராமமக்கள் வனத்துறைுக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்கள் யானை துரத்தும் போது அதன் வழித்தடத்தில் திரும்பி போகமுடியாமல் அடுத்துள்ள குடியிருப்புகள் புகுந்துவிடுகின்றன.

இப்படியே பல கிமீ தூரம் வரை யானை வழி தெரியாமல் விளைநிலங்களில் தஞ்சம் அடைகின்றன. இதனை தடுக்க வேண்டுமெனில் யானை ஊருக்குள் புகும்போது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டால் அங்கு வரும் வன்பபாதுகாப்பு படையினர் யானையை அதன் வழித்தடத்தில் எளிதாக திருப்பி அனுப்பி காட்டுக்கள் விரட்டி விடுவார்கள். எனவே, யானை விளைநிலங்களுக்குள் புகுந்தால் உடனடியாக வனத்துனறையிருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:'தமிழ்நாடு வாழ்க' கோவை மக்கள் நீதி மய்யம் போஸ்டர்!

Last Updated : Jan 9, 2023, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.