ETV Bharat / state

ஊதிய உயர்வு அளிக்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 23, 2020, 5:36 PM IST

ஈரோடு: முதலமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வை வழங்கக் கோரி கிராமப்புற ஊராட்சி பணியாளர்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

sanitary workers Demand
Erode sanitary workers protest

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 600 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. கரோனா பாதிப்புக்குள்ளான காலத்தில் இடைவிடாது நோய்த்தொற்று பரவலை தடுக்க கிராமப்புற ஊராட்சி பணியாளர்களின் பணியை பாராட்டி முதலமைச்சர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வை அறிவித்தார்.

ஆனால் இதுவரை அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் தங்கள் உயிரை குறித்துக்கூட கவலைப்படாமல் பிறரின் பாதுகாப்புக்காக பணியாற்றிய எங்களுக்கு அரசு தாமதப்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பி 300க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.

ஊதிய உயர்வை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராமப்புற தூய்மைப் பணியாளர்களை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என். சுந்தரம் இதில் கலந்துகொண்டார், அதனைத் தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் ஆகிய பகுதிகளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.