ETV Bharat / state

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கியது

author img

By

Published : Apr 20, 2021, 12:40 AM IST

ஈரோடு: பிளஸ் 2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி செய்முறைத் தேர்வு நேற்று (ஏப்ரல்.19) தொடங்கியது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்கள் கரோனா பரிசோதனைக்கு பின்னர் செய்முறைத் தேர்வில் கலந்துகொண்டனர்.

செய்முறைத் தேர்வானது மே 24ஆம் தேதிவரை நடைபெறயுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. குறிப்பாக நேற்று இயற்பியல், வேதியியல், விலங்கியல், புவியியல் பாடப்பிரிவுகளுக்கான செயல்முறைத் தேர்வு நடைபெற்றது.

இதையும் படிங்க: பருவத்தேர்வு: புத்தகத்தைப் பார்த்து எழுத அண்ணா பல்கலை. அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.