ETV Bharat / state

'இந்திய சட்டையை சீன அதிபர் விரும்பி அணியும் காலம் வரும்' ராகுல்!

author img

By

Published : Jan 25, 2021, 9:40 AM IST

ஈரோடு: நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் தொழில்முனைவர்களாக மாறினால், சீன அதிபர் இந்திய சட்டையை அணிய விரும்புவார் என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்
ராகுல்

ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் காங்கிரஸ் எம்பி., ராகுல்காந்தி நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நெசவு தறியில் சேலை தயாரிப்பதை கூர்ந்து கவனித்த அவர், நெசவாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில்," நெசவாளர்களின் நிலையைத் தெரிந்து கொள்வதற்கு வந்துள்ளேன். நாட்டில் நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் நிலை பலவீனமாகவுள்ளது. இதை மாற்றி உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்த நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். இந்தியா அடிமைப்பட்டு கிடந்த போது நெசவாளர்கள், தொழிலாளர்கள் மட்டுமே ஆங்கிலேயர்களிடம் எதையும் விற்காமல் மானத்துடன் வாழ்ந்துவந்ததைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

ஜிஎஸ்டி மூலம் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி, பிரதமராக இருந்தபோது நெசவாளர்கள் பாதிக்கப்படகூடாது என சிறப்பு ரக ஒதுக்கீடு செய்திருந்தார். சீனா ராணுவம் இந்திய எல்லை வரை வந்துள்ளது. சீனாவை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட மோடி பேச தயங்குகிறார்.

நாம் பலவீனமாக இருப்பதாக சீனா நினைக்கிறது. நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் தொழில் முனைவர்களாக மாறினால் சீன அதிபர் இந்திய சட்டையை அணிய விரும்புவார். மோடி அரசு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்துள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.