ETV Bharat / state

வனவிலங்குகளை வேட்டையாட கண்ணிவெடி வைத்தவருக்கு அபராதம்!

author img

By

Published : May 22, 2020, 12:06 PM IST

ஈரோடு: பாலாற்றின் கரையோரம் கண்ணிவெடி வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை கைது செய்த வனத்துறையினர், அவருக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி. இது தமிழ்நாடு-கர்நாடக எல்லை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள தட்டகரை வனசரகத்திற்குள்பட்ட மத்திமரத்தள்ளி என்ற இடத்தில் பாலாற்றின் கரையோர பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வனவிலங்குகளை பிடிப்பதற்காக கண்ணிவெடி வைத்துக் கொண்டிருந்த ஒருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் பெத்தனம்பாளையத்தைச் சேர்ந்த மணி(42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்து ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க: ஆம்பன் நேரலை: பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.