ETV Bharat / state

"ஒரே நாடு ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம்" - ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 2:16 PM IST

ஒரே நாடு ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம் என்றும் நாடு முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

one-nation-one-election-is-the-imperative-of-the-times-governor-cp-radhakrishnan
ஒரே நாடு ஓரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்-ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஈரோடு: வேலப்பம்பாளையத்தில் வேதபாடசாலை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கல்வெட்டினை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "ஜார்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து உள்ளேன்.

8 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தரைவழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். ஜார்கண்ட் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் விரைவில் முன்னேற்றம் அடையும் என்றார். ஒரே நாடு ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும்.

நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் பொழுது பஞ்சாயத்து தேர்தல் வரை அனைத்தும் ஒன்றாக நடைபெற வேண்டும் அப்போதுதான் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும். நாடு தேவையில்லாத தடைகளை நீக்க முடியும் அடிக்கடி தேர்தல் என்பது நாட்டிற்கு கேடு அதிகார பங்கீடு என்பது தேர்தலின் மூலம் வருவதால் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடந்து முடிந்திட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுநரை போன்ற ஒரு நல்ல ஆளுநர் இதுவரை கிடைக்கப் பெறவில்லை தற்போது உள்ள ஆளுநர் தூய ஒழுக்கம் தமிழ் மொழியின் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமிழர் கலாச்சாரம் பண்பாடு தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீதும் கரை கொண்டவராக உள்ளார். தமிழகத்தில் ஆளும் அரசு நீட் தேர்வை கொண்டு ஆளுநரை எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வு மாற்றி அமைக்க வேண்டும் என திமுக விரும்பினால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமே தவிர ஆளுநர் மீது குறை சொல்லக்கூடாது. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அனுப்பப்படும் அனைத்து தீர்மானங்களும் ஆளுநரின் ஒப்புதலை பெறும்.இந்திய தண்டனைச் சட்டத்திற்கு எவ்வளவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களோ அந்த அளவிற்கு வழக்கறிஞர்களின் ஆதரவும் உள்ளது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Somnath : பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்1 வெற்றிகரமாக பிரிந்தது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.