ETV Bharat / state

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம்.. மகாராஷ்டிரா மதுபோதை ஆசாமி கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 11:36 AM IST

Updated : Nov 3, 2023, 12:08 PM IST

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த மகாராஷ்டிராவை சேர்ந்த மது போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது
மது போதையில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு ரயில் நிலையத்திற்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அக்டோபர் 31ஆம் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஈரோடு எஸ்.பி ஜவஹர் உத்தரவின்பேரில், நகர டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஈரோடு ரயில் நிலையத்தின் கார் பார்க்கிங், இருசக்கர வாகனம் பார்க்கிங், ரயில்வே பார்சல் சர்வீஸ், கிடங்கு ரயில்வே நடைபாதையில் உள்ள கடைகள் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

20க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அதிர்ஷ்டவசமாக எந்த வெடிகுண்டும் கண்டறியவில்லை என்றும், மிரட்டல் போலி என உறுதியானதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இருப்பினும், ஆந்திர மாநிலத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதையும் படிங்க: காவல் நிலையம் சென்ற ரவுடி உயிரிழப்பு! விசாரணைக்காக வந்த போது வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு என போலீசார் தகவல்! உறவினர்கள் வாக்குவாதம்!

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சந்தோஷ் என்பவர் மது போதையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, காவல் துறையினர் அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், ஆந்திர மாநிலம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த பொழுது மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அளித்த தகவலின் பெயரில், ரயில்வே காவல் துறையினர் சந்தோஷை பிடித்தனர். இதனையடுத்து, ஈரோட்டில் இருந்து சென்ற தமிழக ரயில்வே காவல் துறையினர், சந்தோஷை தீவிர விசாரணை மேற்கொண்டு ரயிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததை உறுதி செய்தனர். அதனைத்தொடர்ந்து, ஈரோடு ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்த தமிழக ரயில்வே காவல்துறையினர் சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

Last Updated : Nov 3, 2023, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.