ETV Bharat / state

ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு - கே.எஸ். அழகிரி பேட்டி

author img

By

Published : Sep 4, 2022, 7:38 PM IST

ஆர்.எஸ்.எஸ்-ன் உடைய நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பான உணர்வு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டியளித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு- கே.எஸ்.அழகிரி பேட்டி
Etv Bharatஆர்.எஸ்.எஸ் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு- கே.எஸ்.அழகிரி பேட்டி

கன்னியாகுமரி: முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் 150 நாள்கள் நடக்கும் நடைபயணம் வரும் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி தொடங்க உள்ளார். இது குறித்து ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு- கே.எஸ்.அழகிரி பேட்டி

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், மத்திய நிதி அமைச்சர் ஒரு மாநிலத்தில் சென்று ஒரு மாவட்ட ஆட்சியரை நேருக்கு நேர் மிரட்டுவது என்பது மரபு அல்ல அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை இதில் முதலமைச்சர் பதில் சொல்லியிருந்தால் பிரச்சனை வேறு மாதிரி திரும்பியிருக்கும் என அழகிரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் சுதந்திரத்திற்கு முன்பு இந்த நாட்டில் தீண்டாமை, சமூக நீதி, ஏற்றத்தாழ்வு ,வறுமை, ஜாதி வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. அதையெல்லாம் கடந்து மகாத்மா காந்தி சுதந்திரம் என்ற ஒரு போர்வையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். அதேபோன்றுதான் இன்று சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த நிலைமையை போன்று ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்கள்.

இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக வேண்டி தான் ராகுல் காந்தி சமூக புரட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மூவாயிரத்தி ஐநூறு கிலோமீட்டர் 150 நாட்கள் பயணம் நடைபெறும் செய்ய உள்ளார்.

மத்திய அரசு எதையும் ஜனதா ரீதியாக பார்ப்பதில்லை கூட்டாட்சி தத்துவத்திலும் அவர்கள் நோக்குவதில்லை எல்லாம் அவர்கள் தனிப்பட்ட ஒரு விதத்தில் இயங்குகிறார்கள் ஆர் எஸ். எஸ்.சினுடைய நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பான உணர்வு ஏற்பட்டுள்ளது. தேசத்தின் இறையாண்மையைகாக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த நோக்கில் இந்த நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

ஜிஎஸ்டி-யில் குறைந்த நிதியை ஈடு செய்வதாக மத்திய அரசு சொல்லியிருந்தார்கள் ஆனால் தற்போது ஜிஎஸ்டி என்னுடைய வரி விதிப்பால் மாநில அரசுகள் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அழகிரி, கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் கருப்பு பணமும் கைப்பற்றப்படவில்லை, 15 ரூபாய் கூட போடப்படவில்லை, வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன, இவற்றையெல்லாம் பொது மக்களுக்கு தெரியப்படுத்தவே ராகுல் காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி பேரணி மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க:ஹைதராபாத் சுதந்திர தினமா..? தெலங்கானா ஒருமைப்பாட்டு தினமா..? பாஜக Vs கேசிஆர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.