ETV Bharat / state

மண் உருவ பொம்மைகளால் நேர்த்தி கடன் - விவசாயிகள் வழிபாடு

author img

By

Published : Jan 16, 2020, 8:46 PM IST

ஈரோடு: மண் உருவ பொம்மைகளை நேர்த்தி கடனாக செலுத்தி விவசாயிகள் மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.

வழிபாடு
வழிபாடு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் ஆண்டுதோறும் உழவர் திருநாளான மாட்டு பொங்கலன்று பசு, எருது உள்ளிட்ட கால்நடைகளின் உருவங்கள் யானை, மான் உள்ளிட்ட பலவகை வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் குழந்தைகள் உருவங்களை களிமண்ணால் செய்து அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் மாதேஸ்வரன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று உருவங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதேபோல் இந்தாண்டும் கால்நடைகளின் உருவங்கள் வீட்டு விலங்குகளின் உருவங்கள் மற்றும் வனவிலங்குகளின் உருவங்களை கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்து களிமண்ணால் செய்ய ஆரம்பித்து 100க்கும் மேற்பட்ட உருவங்களை வடிமைத்து மாட்டு பொங்கலான இன்று அனைத்து உருவங்களையும் தலையில் சுமந்து கொண்டையம்பாளையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன்கோயிலுக்கு எடுத்துச்சென்றனர்.

கோயில் வழிபாடு

அங்கு மண்பானையில் பொங்கல் வைத்து மாதேஸ்வர சாமிக்கு படையலிட்டு இந்த களிமண்ணால் ஆன உருவங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இவ்வாறு செய்வதினால் கால்நடைகள், வீட்டுவிலங்குள் மற்றும் வனவிலங்குகளுக்கு நோய் மற்றும் உடல்கோளாறுகள் ஏற்படாமல் காக்கும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

விவசாயி பேட்டி

மேலும், இதனால் ஆண்டு தோறும் பெய்யவேண்டிய மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அதேபோல் இந்த கோயிலில் உருவ வழிபாடு செய்த பின்னர் இங்குள்ள கிணற்று நீரை தீர்த்தமாக எடுத்துச்சென்று வீட்டில் உள்ள கால்நடைகள் வீடு மற்றும் விவசாய நிலங்கள் உழவு பணி கருவிகளுக்கு தெளித்த பின்னர் தொழுவத்தில் மாட்டுப்பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளுக்கு உணவு வழங்கி சிறப்பு செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழிபாட்டில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Intro:


Body:tn_erd_02_sathy_mattu_pongal__pooja_vis_tn10009 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது கால்நடை வளர்ப்பு ஆடு மாடு வளர்த்து வருகின்றனர் மாட்டுப்பொங்கலன்று இப்பகுதியில் சிறப்பாக வழிபாடுகள் நடத்துவது வழக்கம் இதன்படி இன்று சத்தியமங்கலம் பகுதியில் கால்நடைகள் குளிப்பாட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர் அதனைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் மலைப்பகுதியில் உள்ள நடு மலை மாதேஸ்வரன் கோயில் மாதேஸ்வர சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன விவசாயிகள் கால்நடை நோயின்றி வாழவும் கால்நடை செழிக்கவும் மாடு போன்ற உருவ பொம்மைகளை வைத்து வணங்கினார் அங்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை தோட்டத்துக்கு எடுத்துச்சென்று கால்நடைகள் மீது தெளித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மண் உருவ பொம்மைகள் கொண்டு வைக்கப்பட்டிருந்தன ஒருமணி உருவபொம்மை 150 ரூபாய் வரை விற்கப்பட்டது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் இக்கோயிலில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.