ETV Bharat / state

புதுக்கரைபுதூரில் முளைவிட்ட நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்

author img

By

Published : Oct 5, 2021, 9:51 PM IST

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரைபுதூரில் முளைவிட்ட நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers protest by pouring germinated paddy seeds on the road in Pudukkaraiputhur
Farmers protest by pouring germinated paddy seeds on the road in Pudukkaraiputhur

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலமாக 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்களின் அறுவடை நடைபெற்று வருகிறது.

இதனால் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுபுறப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

நாள்தோறும் ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஒரு ஏக்கருக்கு 80 சிப்பம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வந்தனர்.

விளைச்சல் அதிகரிப்பு; கொள்முதல் அளவு குறைவு

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக 60 சிப்பம் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட ஏக்கருக்கு 10 சிப்பம் வரை அதிக விளைச்சல் உள்ளது. விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில் கொள்முதல் அளவைக் குறைத்ததால் விவசாயிகள் 10 முதல் 20 சிப்பம் வரை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

நெல்மணிகளை சாலையில் கொட்டி மறியல்

இதனால் மீதமான நெல் மணிகள் முளைத்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் 80 சிப்பமே கொள்முதல் செய்ய வலியுறுத்தி கோபி, அந்தியூர் சாலையில் புதுக்கரைபுதூரில் முளைத்து போன நெல் மணிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கோபிசெட்டிபாளையம் தாசில்தார் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர்; மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காதலியை தினமும் பேச சொல்லுங்கள் - சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.