ETV Bharat / state

மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடி: விவசாயி கைது

author img

By

Published : Jan 23, 2022, 4:22 PM IST

ஈரோடு மாவட்டம் கேர்மாளம் மலைப்பகுதியில் மக்காச்சோள பயிர்க்கு இடையில் கஞ்சா செடியை வளர்த்து வந்த விவசாயியை நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

பறிமுதல்  செய்யப்பட்ட கஞ்சா செடிகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கேர்மாளம் அருகே உள்ள தலுதி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டப்பா (40). மானாவாரி விவசாயியான கொண்டப்பா தனக்கு சொந்தமான நிலத்தில் மக்காசோளம் பயிரிட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்காச்சோள பயிர்க்கு இடையில் ஊடுபயிராக கஞ்சா செடியை பயிரிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பறிமுதல்  செய்யப்பட்ட கஞ்சா செடிகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள்

அதன் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கொண்டப்பாவின் மக்காச்சோள தோட்டத்தில் சோதனை செய்தனர். இதில் கஞ்சா செடி வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 2 அடி முதல் 3 அடி வரை வளர்ந்து இருந்த 158 கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். அதே போல் நன்கு வளர்ந்த இரண்டு பெரிய கஞ்சா செடியையும் பறிமுதல் செய்த நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விவசாயி கொண்டப்பாவை கைது செய்து ஆசனூர் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.