ETV Bharat / state

சாலையில் பகலில் யானை நடமாட்டம் வாகன ஓட்டிகள் அவதி!

author img

By

Published : Feb 4, 2020, 2:55 PM IST

ஈரோடு: தலமலை வனச்சாலையில் பகல் நேரத்தில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

erode thalamalai elephant crossing on the roads on the daytime makes the Motorists unmove for a while!
தலமலை சாலையை கடக்கும் யானைகளால் வாகன ஓட்டிகள் அவதி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. கோடை வெயில் தாக்கம் தொடங்கியுள்ளதால் வனக்குட்டைகளில் தண்ணீர் குறைந்துவிட்டது. அதனால் தலமலை வனச்சாலையில் தற்போது பகல் நேரத்தில் யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

திம்பம் முதல் தலமலை வரை உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள தலமலை வனச்சாலையில் யானைகள் பகல் நேரங்களில் நடமாடுகின்றன. இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள காளிதிம்பம், மாவநத்தம், பெஜலட்டி, இட்டரை, தடசலட்டி, ராமரணை உள்ளிட்ட வனக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இச்சாலையில் பயன்படுத்துகின்றனர்.

ராமரணை பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் யானை நடமாடுவதோடு வாகனங்களை வழிமறிப்பதால் அக்கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை ராமரணை வனப்பகுதியில் சாலையோரம் யானை ஒன்று முகாமிட்டது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பகுதியில் சாலையைக் கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு யானை மெதுவாக சாலையை கடந்து சென்ற பிறகு வாகன ஓட்டிகள் சாலையில் சென்றனர்.

தலமலை சாலையை யானைகள் ஜீப்ரா கிராஸிங்க செய்வதால் வாகன ஓட்டிகள் அவதி!

இதையும் படியுங்க:

குழிக்குள் தவறி விழுந்த யானையை ஜேசிபி மூலம் மீட்ட வனத்துறையினர் - காணொலி!

Intro:Body:tn_erd_01_sathy_elephant_move_vis_tn10009

தலமலை சாலையை கடக்கும் யானைகள் : வனத்துறை எச்சரிக்கை


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. கோடை வெயில் தாக்கம் துவங்கியுள்ளதால் வனக்குட்டைகளில் தண்ணீர் குறைந்துவிட்டதாலும் தலமலை வனச்சாலைகளில் தற்போது பகல் நேரங்களில் யானகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. திம்பம் முதல் தலமலை வனப்பகுதியில் அமைந்துள்ள தலமலை வனச்சாலையில் யானைகள் பகல்நேரங்களில் நடமாடுகின்றன. இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள காளிதிம்பம், மாவநத்தம், பெஜலட்டி, இட்டரை, தடசலட்டி, ராமரணை உள்ளிட்ட வனகிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இச்சாலையில் பயன்படுத்துகின்றனர். ராமரணை பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் யானை நடமாடுவதோடு வாகனங்களை வழிமறிப்பதால் வனகிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை ராமரணை வனப்பகுதியில் சாலையோரம் யானைகள் முகாமிட்டன. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பகுதியில் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் மெதுவாக சாலையை கடந்து சென்றது. இதன்பின் வாகன ஓட்டிகள் சென்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.