ETV Bharat / state

லஞ்சப் புகார் - பேட்ரோல் போலீசார் கூண்டோடு மாற்றம் - எஸ்பி உத்தரவு!

author img

By

Published : Oct 1, 2020, 11:56 AM IST

ஈரோடு: நெடுஞ்சாலைகளில் கண்காணிப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த வாகன பேட்ரோல் குழுவினர் அதிக லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை அடுத்து, ஒட்டுமொத்த குழுவையும் கலைத்து புதிய குழுவை அமைத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவிட்டுள்ளார்.

எஸ்பி உத்தரவு
எஸ்பி உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து பெருந்துறைவரையிலான 17 கிலோ மீட்டர் தூரமுள்ள விபத்து பகுதிகளைக் கண்காணித்திடவும், விபத்துகள் நிகழ்ந்தால் உடனடியாக காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்திடவும், தேசிய நெடுஞ்சாlலைப் பகுதிகளில் விபத்துகள் நிகழாமல் தடுத்திடவும், தனிநபர் மற்றும் குழுவினர் தகராறுகளைத் தீர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுத்திடவும் மாவட்டக் காவல் துறை சார்பில் தனித்தனியாக வாகன பேட்ரோல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனி கண்காணிப்புக்காக அமைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் கரோனா காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்து வகை வாகனங்களையும் தடுத்து நிறுத்தி வீண் தொந்தரவு செய்துவருவதாகவும், அவசரத்திற்காக செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் விபத்துக்கள் குறித்து சரியானத் தகவல்களை காவல் நிலையத்திற்கு வழங்கிடாமல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மிகவும் அத்தியாவசியப் பகுதியான தேசிய நெடுஞ்சாலைப் பகுதி மற்றும் விபத்துப் பகுதிகளில் பணியாற்றுவோர் மிகவும் கண்ணியத்துடனும், அக்கறையுடனும் பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்திய காவல் கண்காணிப்பாளர், பழைய பேட்ரோல் குழுவை உடனடியாகக் கலைத்துவிட்டு புதிய உதவி ஆய்வாளர்கள், காவலர்களைக் கொண்ட புதிய வாகனத் தணிக்கைக் குழுக்களை அமைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.