ETV Bharat / state

கடும் போட்டிகளுக்கிடையே சத்தியமங்கலம் ஊராட்சியை கைப்பற்றியது திமுக

author img

By

Published : Jan 13, 2020, 7:47 AM IST

ஈரோடு: பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஊராட்சி ஆகிய மூன்று ஒன்றியங்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்தை பிடித்துள்ளது.

erode
erode

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 15 இடங்களில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்யிருந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார்.

திமுகவின் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் திமுக போட்டி வேட்பாளர் சின்னச்சாமிக்கு ஆதரவாக அதிமுகவினர் 6 பேர் வாக்களித்தனர். மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் இளங்கோவன் 8 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக போட்டி வேட்பாளர் சின்னச்சாமி 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

மறைமுகத் தேர்தலில் தோல்வியடைந்த திமுக போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள் இந்த வெற்றியை எதிர்த்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திமுக வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காரில் வருகை தந்தார். அப்போது திமுக போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கோஷமிட்டதால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் ஊராட்சியில் திமுக வெற்றி

அதிமுக, காங் வெற்றி

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ருக்குமணி 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரத்தினம்மா 6 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளர் மங்களம்மா 5 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 3 ஒன்றியங்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ் தலா ஓர் இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

துணைத்தலைவர் தேர்தலில் பவானிசாகர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பாலன், சத்தியமங்கலம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி, தாளவாடி ஓன்றியத்தில் முஜிபுல்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மாவட்ட குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் போட்டியின்றி தேர்வு

Intro:Body:tn_erd_05_sathy_dmk_van_vis_tn10009

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் 3 ஒன்றியங்களில் திமுக,காங்கிரஸ் மற்றும் அதிமுகவுக்கு தலா 1 இடம்

வெற்றியை கொண்டாட வந்த ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் காரை துரத்திய போட்டிதிமுகவினர்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் சத்தியமங்கலம்,பவானிசாகர் மற்றும் தாளவாடி ஊராட்சி ஆகிய 3 ஒன்றியங்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்தை பிடித்துள்ளது. இதில் சத்தியமங்கலம் மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் காரில் வந்த அவரை போட்டி திமுகவினர் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டு உறுப்பினர்களில் திமுகவினர் 9 பேரும் அதிமுகவினர் 6 பேர் வந்தனர். அதில் திமுக சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார். திமுகவில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த போட்டி திமுக சார்பில் சின்னச்சாமி போட்டியிட்டார். இதில் போட்டி திமுகவுக்கு அதிமுகவினர் 6 பேர் ஆதரவளித்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் இளங்கோவன் 8 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். சின்னச்சாமி 7 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். தோல்வியுற்ற திமுக போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வெற்றியை எதிர்த்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக வெற்றியை கொண்டாடுவதற்கு ஈரோடு மாவடட திமுக செயலாளர் நல்லசிலம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காரில் வந்தார். அப்போது திமுக போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளரை உள்ளே விடாமல் தடுத்து கோஷமிட்டதால் அவர் காரில் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபுரப்பு ஏற்பட்டது.

அதிமுக, காங் வெற்றி

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா 7 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ருக்குமணி 6 வாக்குகள் பெற்ற தோல்வியடைந்தார்.
தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரத்தினம்மா 6 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளர் மங்களம்மா 5 வாக்குகள் பெற்று தோல்விஅடைந்தார். பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 3 ஒன்றியங்களில் அதிமுக, திமுக மற்றும் காங் தலா 1 இடங்களை கைப்பற்றியுள்ளது. துணைத்தலைவர் தேர்தலில் பவானிசாகர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பாலன், சத்தியமங்கலம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி, தாளவாடி ஓன்றியத்தில் முஜிபுல்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.