ETV Bharat / state

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

author img

By

Published : Jan 19, 2020, 12:09 AM IST

ஈரோடு: பவானிசாகர் அணை அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் இளைஞர் பலி ஈரோடு பவானிசாகர் அணை நீரில் மூழ்கி இளைஞர் பலி ஈரோடு பவானிசாகர் அணை உயிரிழப்புகள் Erode Kilbhavani Drowning Death Erode Bhavani Sagar Dam youth Death Erode Bhavani Sagar Dam Deaths
Erode Kilbhavani Drowning Death

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஜம்பை சின்னமோளபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரது மகன் கார்த்திக். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் கார்த்திக் , சகோதரர் ரமேஷ், நண்பர் கவுதம் ஆகியோருடன் பவானிசாகர் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

தற்போது கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடி தண்ணீர் செல்லும் நிலையில் கார்த்தி ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். இதைக்கண்ட ரமேஷ், கவுதம் இருவரும் அக்கம்பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய கார்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்தி ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினர். இச்சம்பவம் குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

ஆந்திரா தங்க நகை வியாபாரி வழக்கு: 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது!

Intro:Body:tn_erd_05_sathy_drowning_death_vis_tn10009

பவானிசாகர் அணை அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி


பவானிசாகர் அணை அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பவானி அருகே உள்ள ஜம்பை சின்னமோளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி என்பவரது மகன் கார்த்தி. திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளியான இவர் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் தனது தம்பி ரமேஷ், நண்பர் கவுதம் ஆகிய 3 பேரும் காரில் பவானிசாகர் அணைப்பூங்காவிற்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு பவானிசாகர் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளனர். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடி தண்ணீர் செல்வதால் கார்த்தி ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். இதைக்கண்ட ரமேஷ், கவுதம் இருவரும் அக்கம்பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய கார்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்தி இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.