ETV Bharat / state

குடற்புழு நோயால் உயிரிழந்த பெண் யானை

author img

By

Published : Oct 27, 2020, 5:47 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே குடற்புழு நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

Elephant dies of worm disease in erode
Elephant dies of worm disease in erode

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் மலைப்பகுதி அணைக்கரை காவல்சுற்று காட்டில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து விரைந்து அப்பகுதிக்குச் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினர், வனச் சரக அலுவலர்கள் யானையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ததில், குடற்புழு நோயால் யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, உயிரிழந்த யானையின் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.