ETV Bharat / state

ஜார்க்கண்ட் டூ ஈரோடு: ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா

author img

By

Published : Oct 25, 2021, 9:34 AM IST

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ஈரோடு வழியாக கேரளா செல்லும் ரயிலில் எட்டு கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

railway police  cannabis seize  cannabis seized by railway police  cannabis seize in erode railway station  erode railway station  erode news  erode latest news  ஈரோடு செய்திகள்  கஞ்சா கடத்தல்  ஈரோடு ரயில் நிலையத்தில் கஞ்சா  கஞ்சா  கஞ்சா பறிமுதல்
கஞ்சா

ஈரோடு: சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா போன்றவை அதிகளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனால் ரயில்வே காவல்துறையினர் அவ்வப்போது ரயில்களில் சோதனை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில், வட தென் மாநிலங்களில் இருந்து அதிகளவில் ரயில்கள் வருவதனால், ஈரோடு ரயில்வே காவல்துறையினர் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளை சென்று சோதனை செய்து வருகின்றனர்.

கேட்பாரற்று கிடந்த கஞ்சா

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று (அக்.24) காலை 6.30 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. இதையடுத்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர், வழக்கம் போல் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனை செய்தனர். ஒவ்வொரு அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் வகைகள் பை ஒன்று இருந்தது.

பை குறித்து அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டனர். ஆனால் பயணிகள் இந்த பை தங்களுடையது இல்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினை பையை திறந்து பார்த்துள்ளனர். அதில் எட்டு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

வெளிமாநிலத்தில் இருந்து யாரோ கஞ்சாவை கடத்தி விற்க கொண்டு வந்த போது காவலரை பார்த்ததும் மாட்டி விடக் கூடாது என்பதற்காக பையை அங்கேயே வைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேனில் கடத்தப்பட்ட குட்கா - 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.