ETV Bharat / state

மலைப்பாதையில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தப்பித்த பயணிகள்..!

author img

By

Published : Aug 7, 2019, 3:39 AM IST

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் கட்டுபாட்டை இழந்து சிக்கிய தனியார் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

பஸ்

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதையில் செல்கிறது. இம்மலைப்பாதை வழியாக தான் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூருவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து ஈரோடு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.

மலைப்பாதையில் சிக்கிய பேருந்து

இந்த பேருந்து 9ஆவது கொண்டைஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. ஓட்டுநர் உடனடியாக பேருந்து பள்ளத்தாக்கில் விழாமலிருக்க அதன் சக்கரங்களுக்கு இடையே கற்களை வைத்து தடுப்பு அமைத்து பேருந்து நகராமல் நிறுத்தினார். ஓட்டுநரின் இந்த சாமார்த்தியமான செயலால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். பின்னர், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், பயணிகள் ஆகியோர் உதவியுடன் பேருந்து பின்னால் நகர்த்தப்பட்டு மீட்கப்பட்டது.

Intro:nullBody:tn_erd_06_sathy_timbam_bus_accident_vis_tn10009

திம்பம் மலைப்பாதையில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

திம்பம் மலைப்பாதையில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதி நின்றதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரிஅம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மைசூரிலிருந்து 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய தனியார் பேருந்து ஈரோடு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. 9 வது கொண்டைஊசி வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இதையறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பள்ளத்தாக்கில் கவிழாமல் இருக்க பேருந்துகளின் சக்கரங்களுக்கு இடையே கற்களை வைத்து தடுப்பு அமைத்து பேருந்து நகராமல் நிறுத்தினார். இதையறிந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருந்தால் பயணிகள் உயிரிழந்திருக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பிருந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக பேருந்து கவிழாததால் பயணிகள் உயிர்தப்பினர். இதனால் திம்பம் மலைப்பாதையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் உதவியுடன் பேருந்து பின்னால் நகர்த்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.


Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.