ETV Bharat / state

கிரண் பேடி நீக்கத்தால் இனி குழப்பம் நீடிக்காது - இல. கணேசன்

author img

By

Published : Feb 17, 2021, 4:12 PM IST

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளதால் இனி அங்கு குழப்பம் இல்லாமல் நல்ல முன்னேற்றம் அடையும் என நம்புவோம் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல கணேசன்
பாஜக மூத்த தலைவர் இல கணேசன்

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில், தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், "தமிழ்நாட்டில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். தற்போது தேர்தல் களம் சூடு பிடித்திருப்பதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் என்னைப் போன்ற பாஜக தலைவர்கள் தொண்டர்களைச் சந்தித்து, தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

எங்களைப் பொருத்தவரை எந்த சூழலிலும், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. நாட்டுக்கு நலன் தரக்கூடிய திட்டங்களைத் தடுக்கின்ற, நாட்டுக்கு எதிரான கொள்கைக்கு போராடும் 40 அமைப்புகள் திமுகவை ஆதரிக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தேச விரோத அமைப்புகள் ஆட்டம் போடத் தொடங்கிவிடும். இதனால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறோம்.

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது

புதுச்சேரியை பொருத்தவரை முதலமைச்சருக்கு எதிராக துணை நிலை ஆளுநர் செயல்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார். இந்த புகார் குறித்து பிரதமரும் விசாரித்தார். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனி அம்மாநிலம் குழப்பமில்லாமல் நல்ல முன்னேற்றம் அடையும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸுக்கு14 இடங்களும் எதிரணிக்கு 14 இடங்களும் படங்களும் உள்ளன. இரு கட்சிகளும் சட்டப்பூர்வமாக தங்களது பலத்தை நிரூபிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

விவசாயிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற ராகுல் குற்றச்சாட்டு தவறானது டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகளல்ல; இடைத்தரகர்கள். அவர்கள் தான் போராடுகின்றனர்.

அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக உள்ளது தொகுதி பங்கீடு குறித்து பின்னர் பேசப்படும் பிரேமலதா, சசிகலாவுக்கு ஆதரவளித்தது அவர்களுக்கிடையே உள்ள உடன்பாடு. பிரதமர் தமிழ்நாடு வந்த போது முதலமைச்சர் என்ற முறையில் இபிஎஸ் சந்தித்து பேசினார் ஓபிஎஸ் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பற்றி அவர் கவலைப்படவில்லை, நாம் ஏன் கவலைப்பட வேண்டும். அதிமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ’பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட திமுக’ - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.