ETV Bharat / state

கள்ளக்குறிச்சி வன்முறை: தனியார் பள்ளியைச் சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்கக்கூடாது - கே.எஸ். அழகிரி!

author img

By

Published : Jul 17, 2022, 11:02 PM IST

’தனியார் பள்ளியைச் சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்கக் கூடாது. குழந்தையின் மரணத்தை மறைத்து விட்டு வேறு கோணத்தில் செல்வது என்பது தவறு' என திண்டுக்கல்லில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டியளித்துள்ளார்.

தனியார் பள்ளி சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்க கூடாது- கே.எஸ். அழகிரி பேட்டி
தனியார் பள்ளி சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்க கூடாது- கே.எஸ். அழகிரி பேட்டி

திண்டுக்கல்லில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ' சின்னசேலம் சிறுமி மரணம் காவல்துறை முழுமையான விசாரணைக்கு அப்புறம் தான் தெளிவாக தெரியவரும். அந்தக் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், கிராமத்தினர் கொஞ்சம் எழுச்சி அடைந்ததை குற்றம் என்று சொல்ல முடியாது.

அவர்கள் கோபப்பட்டு உள்ளார்கள். அதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள். காவல் துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். காவல் துறை இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் கோபப்பட்டு உள்ளார்கள்.

சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது தான் தவறு. பள்ளியைப் பாதுகாப்பது அவருடைய கடமை. அதை அவர்கள் தவறி உள்ளனர். குழந்தையின் பாதுகாப்பை தனியார் துறை செய்யத் தவறினாலும் தவறுதான்; அரசாங்கம் செய்யத் தவறினாலும் தவறுதான். தனியார் பள்ளி சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்கக்கூடாது. குழந்தையின் மரணத்தை மறைத்துவிட்டு வேறு கோணத்தில் செல்வது என்பது தவறு'இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி வன்முறை: தனியார் பள்ளியைச் சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்கக்கூடாது - கே.எஸ். அழகிரி!

இதையும் படிங்க:பொதுமக்களிடம் லட்ச கணக்கில் மோசடி - நிதி நிறுவன உரிமையாளர் வீடு முற்றுகை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.