ETV Bharat / state

தெருவிளக்கை முறையாக பராமரிக்காத நகராட்சி: கொடைக்கானல்வாசிகள் அவதி!

author img

By

Published : Nov 8, 2019, 7:26 AM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் நகர் பகுதிகளில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட எல்இடி (LED) தெருவிளக்குகள் முறையான பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

kodaikanal-street-led-light-dis-function

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் கண்ணைக் கவரும் வகையில் பளிச்சிடும் எல்இடி தெருவிளக்குகள் 11 கோடி ரூபாய் செலவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.

இந்தத் திட்டமானது நகரின் நுழைவு வாயிலான வெள்ளி அருவி முதல் 24 வார்டுகளின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் வரை அமல்படுத்தப்பட்டது. இந்த தெருவிளக்குகளுக்காக தனித்துவமான மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன. தற்பொழுது இவை அனைத்தும் தொழில்நுட்பக் கோளாறு, மின்கசிவு காரணங்களால் பல இடங்களில் காட்சிப்பொருளாகவே காணப்படுகிறது.

காட்சிப் பொருளாக காணப்படும் தெருவிளக்குகள்

பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக செயல்பாட்டில் இல்லாததால் இரவு நேரங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்துவருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் துரிதமாக இந்த மின் விளக்குகளை முறையாக பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க: கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்!

Intro:திண்டுக்கல் 7.11.19

கொடைக்கானல் நகர் பகுதிகளில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட எல்இடி தெருவிளக்குகள் முறையான பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி

Body:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் கண்ணைக் கவரும் வகையில்  பளிச்சிடும் வண்ணவிளக்குகள் 11 கோடி ரூபாய் செலவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது.

இந்த திட்டமானது நகரின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் 24 வார்டுகளில் முக்கிய சுற்றுலா தலங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த தெருவிளக்குகளுக்காக பிரத்யேக மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன. தற்பொழுது இவை அனைத்தும் தொழில்நுட்ப கோளாறு மின்கசிவு என பல இடங்களில் காட்சி பொருளாகவே  காணப்படுகிறது.

மேலும், இந்த விளக்குகளின் அருகே செடி, கொடிகள் வளர்ந்து தெரு விளக்குகளை மறைத்துள்ளது. இதனால் மின் கசிவு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக எறியாமல் உள்ளதால் இரவு நேரங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் துரிதமாக இந்த மின் விளக்குகளை முறையாக பராமரித்து காட்சிப்பொருளாக இல்லாமல் பளிச்சிடும் வண்ணம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.