ETV Bharat / state

நத்தம் அருகே ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!

author img

By

Published : Feb 9, 2020, 8:01 PM IST

திண்டுக்கல்: நத்தம் அருகே மணக்காட்டூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த காரில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Dindigul
Dindigul

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் நாகவேணி நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (46). இவர் இன்று தனது மனைவி, மாமனார், குழந்தைகளுடன் தனது இண்டிகா காரில் கொட்டாம்பட்டி அருகில் உள்ள வெள்ளிமலை கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு வழிபாடு மேற்கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அரவங்குறிச்சி - மணக்காட்டூர் சாலையில் காரிலிருந்து புகை வந்துள்ளது.

இதைக்கண்ட செந்தில் அனைவரையும் காரை விட்டு இறங்கச் சொல்லி தானும் இறுதியாக இறங்கியுள்ளார். காரில் பற்றிய புகையானது தீயாக மாறி மளமளவென கார் முழுவதும் பரவியது. இதனிடையே கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நத்தம் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

நத்தம் அருகே ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

காரில் பயணம் செய்தவர்கள் உடனே வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், நத்தம் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையே ஒரு 'பிளாக் மெயில்' தான் - திருமாவளவன்

Intro:திண்டுக்கல் 8.2.20

நத்தம் அருகே மணக்காட்டூர் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

Body:திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் நாகவேணி நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் (46). இவர் இன்று தனது மனைவி, மாமனார், குழந்தைகளுடன் தனது இண்டிகா காரில் கொட்டாம்பட்டி அருகில் உள்ள வெள்ளிமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது அரவங்குறிச்சி- மணக்காட்டூர் சாலையில் வரும்போது காரில் இருந்து புகை வந்துள்ளது.

இதைக்கண்ட உடனே காரை நிறுத்தி அனைவரும் இறங்கி விட்டனர். காரில் பற்றிய புகையானது தீயாக மாறி மளமளவென கார் முழுவதும் பரவியது. இந்த தீயால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில் காரில் பயணம் செய்தவர்கள் உடனே வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.