ETV Bharat / state

Karimangalam accident case: குடிபோதையில் நண்பனை வாகனத்தின் மீது தள்ளிவிட்டு விபத்து என நாடகம்: இருவர் கைது

author img

By

Published : Dec 25, 2021, 8:58 PM IST

Karimangalam accident case: தர்மபுரியில் குடிபோதையில் நண்பனை வாகனத்தின் மீது தள்ளிவிட்டு விபத்து என நாடகம் ஆடிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இரண்டு பேர் கைது
இரண்டு பேர் கைது

Karimangalam accident case: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர்கள் மேகவேலு, விஜயகுமார், செந்தில்குமார். டிசம்பர் 5 ஆம் தேதி தெல்லனஅள்ளி பகுதிக்கு மூவரும் சென்றுள்ளனர். அங்கு வாகன விபத்தில் மேகவேலு காயமடைந்துவிட்டதாக அவரது நண்பர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பலனளிக்காமல் மேகவேலு டிசம்பர் 22 ஆம் தேதி உயிரிழந்தார். காரிமங்கலம் காவல் துறையினர், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சியில் அவர்கள் மூவரும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் மீது மேகவேலுவை உடனிருந்தவர்கள் தள்ளி விட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மேகவேலு உயிரிழக்க காரணமான விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: cloth bag campaign: மஞ்சப்பை விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.