ETV Bharat / state

வளைகாப்பு நடைபெறயிருந்த நிலையில் கர்ப்பிணி சந்தேகத்திற்குரிய வகையில் தற்கொலை

author img

By

Published : Apr 1, 2022, 5:28 PM IST

தர்மபுரி அருகே வளைகாப்பு நடைபெறயிருந்த நிலையில், கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வளைகாப்பு நடைபெறவுள்ள நிலையில் கர்ப்பிணிப்பெண் மர்ம முறையில் தற்கொலை
வளைகாப்பு நடைபெறவுள்ள நிலையில் கர்ப்பிணிப்பெண் மர்ம முறையில் தற்கொலை

தர்மபுரி: அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (எ) பிரதீப் என்பவருடைய மனைவி சோனியா(20). கடந்த 11 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், பிரதீப் கோவையில் கூலி வேலை செய்துவருகிறார். மனைவி சோனியா, 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும் சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகத் தெரிகிறது.

வளைகாப்பு நடைபெறவுள்ள நிலையில் கர்ப்பிணிப்பெண் மர்ம முறையில் தற்கொலை
கர்ப்பிணி

வளைகாப்பு நடைபெறயிருந்த நிலையில் தற்கொலை: இதைக்கண்ட சோனியா, அவருடைய அத்தை முத்தழகியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பவானியும் பொன்னம்மாவும் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று(ஏப்.1) சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு சந்தேகத்திற்குரிய முறையில் சோனியா வீட்டில் தூக்கிட்டபடி இறந்து கிடந்துள்ளார்.

வளைகாப்பு நடைபெறவுள்ள நிலையில் கர்ப்பிணிப்பெண் மர்ம முறையில் தற்கொலை
வளைகாப்பு நடைபெறயிருந்த நிலையில் கர்ப்பிணி சந்தேகத்திற்குரிய முறையில் தற்கொலை

இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு உடலை உடல்கூராய்விற்காக கொண்டுவந்தனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் கொலையா..?, தற்கொலையா..? என அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வளைகாப்பு நடைபெறயிருந்த நிலையில் கர்ப்பிணி தற்கொலை

காவல் துறையினர் விசாரணை: மேலும், சோனியாவின் கணவர் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் மருத்துவமனைக்கு வராதது இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று வளைகாப்பு நடைபெற இருந்த ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி சந்தேகத்திற்குரிய முறையில் தூக்கிட்டபடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அரூா் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

இதையும் படிங்க:மாநில அரசிற்கு கூடுதல் செலவு ஆகிறது; ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விரைந்து தாருங்கள் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.