ETV Bharat / state

கருணாநிதி பிறந்த நாள் விழா - மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

author img

By

Published : Jun 3, 2021, 4:46 PM IST

தருமபுரி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி வனத்துறை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இன்று (ஜூன் 3) தொடங்கி வைத்தார்.

தருமபுரி வனத்துறை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
தருமபுரி வனத்துறை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளையொட்டி வனத்துறையின் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று (ஜூன் 3) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கலந்து கொண்டு மரங்கள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

6,500 தடுப்பூசிகள்

நிகழ்ச்சயில் பேசிய மாவட்ட ஆட்சியர், "கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க 6,500 தடுப்பூசிகள் தருமபுரி மாவட்டத்திற்கு வந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணி நடைபெற்று வருகிறது.

தருமபுரி வனத்துறை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.
தருமபுரி வனத்துறை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம இதுவரை இணைப்பு பெறாத கிராமங்களுக்கு புதிய இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலை வசதி், தெருவிளக்கு, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.