ETV Bharat / state

எங்களை காப்பாற்றுங்கள்..! - எஸ்பியிடம் இளம்பெண் மனு!

author img

By

Published : Oct 31, 2019, 11:22 PM IST

தர்மபுரி: காதல் இளம் ஜோடிக்கு மிரட்டல் விடுக்கும் பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கோரி காதல் ஜோடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

love couple

தருமபுரி மாவட்டம் பி.அக்ரஹாரம் அருகே உள்ள சின்னபெரமனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகள் நவீனா. இவர் இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நான் தனியார் செவிலியர் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பி.அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்தோம்.

காதல் விவகாரம் குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, எனது பெற்றோர் பூதிநத்தம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்வருடன் எனக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து திருமண ஏற்பாடு செய்து வந்தனர். மேலும் எனது பெற்றோர் என்னை வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறி காதலன் முனியப்பனை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு முனியப்பனின் பெற்றோர் உதவியுடன் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் முனியப்பனை திருமணம் செய்து கொண்டேன்.

காவல் கண்காணிபாளரிடம் மனு அளித்த காதல் ஜோடி

எனக்கு முனியப்பனுடன் திருமணம் நடைபெற்ற தகவல் எனது பெற்றோருக்குத் தெரியவந்ததும், எனக்கும் எனது கணவரின் குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகவே எனது பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு அளித்து, எனது கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து; காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமைடைந்த காதல் தம்பதி!

Intro:தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்.Body:தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்.Conclusion:தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம். தர்மபுரி மாவட்டம் பி அக்ரஹாரம் சின்னபெரமனுர் கணேசன் என்பவரது மகள் நவீனா இவர் இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை அளித்தார். நவீனா அளித்த மனுவில் தான் தனியார் செவிலியர் கல்லூரியில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் பி. அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ஜெமினி என்பவர் மகன் முனியப்பன் என்பவரை காதலித்து வந்துள்ளார். நவீனா காதல் பற்றி பெற்றோரிடம் தெரிவித்த போது அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நவீனா எதிர்ப்பை மீறி அவரது பெற்றோர்கள் நாளை பூதி நத்தம் பகுதியை சார்ந்த சின்னசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பத்திரிகை அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.நவீனாவை தன்னை வீட்டில் வைத்து பூட்டி திருமணம் ஏற்பாடுகள் செய்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறி காதலன் முனியப்பனிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசி முனியப்பனின் பெற்றோர் உதவியுடன் ஓசூர் சென்று பின்பு நேற்று சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாகவும் தனது பெற்றோர்கள் தனக்கும் தனது கணவருக்கும். அவரது குடும்ப குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுப்பதாகவும். அவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும் கல்வி ஆவணங்கள் .ஆதார் அட்டை போன்றவற்றை பெற்றுத் தர வேண்டும் என மாவட்டகாவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.நவீன வுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த சின்னசாமிக்கு நாளை வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவு செய்து திருமண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.