ETV Bharat / state

தருமபுரி மொரப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக!

author img

By

Published : Jan 30, 2020, 4:43 PM IST

தருமபுரி: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமதி செங்கண்ணன் வெற்றிபெற்றுள்ளார்.

தர்மபுரி மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றிய -திமுக!
தர்மபுரி மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றிய -திமுக!

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமதி செங்கண்ணன் வெற்றிபெற்றுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், தருமபுரி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் இம்மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது.

இத்தேர்தலில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் நடத்தும் அலுவலர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது‌.

மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் சுமதி செங்கண்ணன் பாமக சார்பில் பெருமாள் வேட்புமனு தாக்கல்செய்தனர். நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சுமதி செங்கண்ணன் ஐந்து வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பெருமாள் நான்கு வாக்குகளும் ஒரு வாக்கு செல்லாத வாக்கும் பதிவாகின.

தருமபுரி மொரப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக!

இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் திமுக வேட்பாளர் சுமதிசெங்கண்ணன் வெற்றிபெற்றதாக அறிவித்தார். மறைமுகத் தேர்தல் நடைபெற்ற மொரப்பூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :'அரசைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுகிறார்' - அமைச்சர் கடம்பூர் ராஜு

Intro:தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமதி செங்கண்ணன் வெற்றி பெற்றார்.


Body:தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமதி செங்கண்ணன் வெற்றி பெற்றார்.


Conclusion:

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சுமதி செங்கண்ணன் வெற்றி பெற்றார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் தர்மபுரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் இம்மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் நடத்தும் அலுவலர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது‌. மறைமுக தேர்தலில் திமுக சார்பில் சுமதி செங்கண்ணன் பாமக சார்பில் பெருமாள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சுமதி செங்கண்ணன் 5 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பெருமாள் 4 வாக்குகளும் ஒரு வாக்கு செல்லாத வாக்குகள் பதிவானது இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் திமுக வேட்பாளர் சுமதிசெங்கண்ணன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.மறைமுகத் தேர்தல் நடைபெற்ற  மொரப்பூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் 3 அடுக்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.