ETV Bharat / state

குப்பைக் கிடங்கு விரிவாக்க பணிக்கு எதிராக போராட்டம்!

author img

By

Published : Dec 27, 2019, 9:16 AM IST

தருமபுரி: அரூா் அருகே குப்பைக் கிடங்கு விரிவாக்க பணியை நிறுத்தக்கோரி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
dharmapuri-people-protest-for-place-extension-work-on-harur-dumping-yard குப்பைக் கிடங்கு விரிவாக்கம் பணிக்கு எதிராக போராட்டம்!
குப்பைக் கிடங்கு விரிவாக்கம் பணிக்கு எதிராக போராட்டம்!

தருமபுரி மாவட்டம் அரூர் நகர் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை மாவேரிப்பட்டி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டு மக்கும், மக்கா குப்பைகள் என இருவகைகளாக பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் குப்பைக் கிடங்கால், உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக மாவேரிப்பட்டி, உடையானூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து, மாவேரிப்பட்டி புதூர் கிராம மக்களின் நலன்கருதி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்து வரும் நிலையில், குப்பைக் கிடங்கை விரிவாக்கம் செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவந்துள்ளது.

இதனால் அப்பணிகளை நிறுத்தக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் செல்வகுமார், அரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சார்பு மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவின் பேரில், விரிவாக்க பணிகள் நிறுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

குப்பைக் கிடங்கு விரிவாக்கம் பணிக்கு எதிராக போராட்டம்!

இதையும் படியுங்க: பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக குப்பையை சேகரிக்கும் பொறியாளர்!

Intro:தருமபுரி அரூா் அருகே குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்யும் பணிகளை நிறுத்திய கிராம மக்கள்.Body:தருமபுரி அரூா் அருகே குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்யும் பணிகளை நிறுத்திய கிராம மக்கள்.Conclusion:தருமபுரி அரூா் அருகே குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்யும் பணிகளை நிறுத்திய கிராம மக்கள்.

தருமபுரி மாவட்டம் அரூர் நகர் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மாவேரிப்பட்டி பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், குப்பை கிடங்கால், உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக மாவேரிப்பட்டி, உடையானூர் மற்றும் மாவேரிப்பட்டி புதூர் கிராம மக்களின் நலன்கருதி இடமாற்றம் செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிற நிலையில் குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இதனை அடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
மக்கள் எதிர்ப்பையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் செல்வகுமார், அரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு சப் கலெக்டர் பிரதாப் அவர்களின் உத்தரவின் பேரில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நிறுத்தப்படும் என தெரிவித்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.