ETV Bharat / state

பிறந்த ஒரே நாளில் ஆண் குழந்தை கடத்தல்!

author img

By

Published : Jun 20, 2021, 3:13 PM IST

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தையை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Dharmapuri  தர்மபுரி செய்திகள்  தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  காணவில்லை  தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை காணவில்லை  காவல் நிலையத்தில் புகார்  கடத்தல்  தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்  விசாரணை  குற்றச் செய்திகள்  dharmapuri news  dharmapuri latest news  baby kidnap  crime news  dharmapuri medial college  child kidnapped from dharmapuri medial college  child kidnap
பிறந்த ஒரே நாளில் ஆண் குழந்தை கடத்தல்

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அருள்மணி - மாலினி தம்பதி. இவர்களுக்கு நேற்று (ஜூன் 20) இரவு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், திடீரென காலை 8.30 மணியளவில் குழந்தையை காணவில்லை. இது குறித்து அருள்மணியும், மாலினியும் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் பலியான சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.