ETV Bharat / state

ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்!

author img

By

Published : Aug 30, 2019, 9:38 AM IST

கடலூர்: மாவட்ட ஆட்சியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்து சுமார் 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

கடலூர் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

மேலும், துணை வட்டாட்சியர் நிலையில் ஒருதலைபட்சமாகவும், மாவட்ட நிர்வாகிகள் பழிவாங்கும் நோக்கத்துடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தேர்தலில் செலவு செய்து நிதி ஒதுக்கீடு பெறாத சூழ்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட தேர்தல் துணை வட்டாட்சியர்களை அதே பணியிடத்தில் மீண்டும் அமர்த்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் முழக்கங்களை எழுப்பினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Intro:கடலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போராட்டம்Body:கடலூர்
ஆகஸ்ட் 29,

கடலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்தும், துணை வட்டாட்சியர் நிலையில் ஒருதலைப்பட்சமாகவும், மாவட்ட நிர்வாகிகள் பழிவாங்கும் நோக்குடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தேர்தலில் செலவு செய்து நிதி ஒதுக்கீடு பெறாத சூழ்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட தேர்தல் துணை வட்டாட்சியர்களை அதே பணியிடத்தில் மீண்டும் அமர்த்த வேண்டும். ஊழியர் விரோதப் போக்கிடன் நடந்துக் கொள்ளும் அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பேட்டி : பார்த்திபன் - மாநில பொதுசெயலாளர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.