ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Feb 26, 2020, 10:47 AM IST

கடலூர்: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest

கடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது, கடலூர் ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் எடுத்துவரும், ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். நடைமுறைகளை தொடர்ந்து மீறி வரும் மாவட்ட ஆட்சியர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், பணி முதுநிலை தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணைகளை விரைவாக வழங்கிட வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் இளநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் என்பவரது இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்து ஆணையிட வேண்டும். வருவாய்த் துறை அலுவலர்களின் நீண்டநாள் கோரிக்கை விரைவில் தீர்வு காண வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு முழுவதுமுள்ள 81 ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையினை ஆதிதிராவிடர் நலத்துறை எடுத்து வருவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறையினர் போராட்டம்

மேலும், மாவட்ட ஆட்சியரின் இந்த ஊழியர் விரோத போக்கு செயலை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் வருகின்ற மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடப்போவதாக சங்கத்தின் மாநில செயலாளர் சங்கரலிங்கம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சருக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?' - அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.