ETV Bharat / state

கோரணபட்டு ஊராட்சி 1ஆவது வார்டு: மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியீடு

author img

By

Published : Jan 9, 2020, 10:08 AM IST

கடலூர்: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் கோரணபட்டு ஊராட்சியில் முதலாவது வார்டு மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கோரணப்பட்டு ஊராட்சி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் Re-counting Results Released in Koranapattu Panchayat Koranapattu Panchayat Re-counting Results
Koranapattu Panchayat Re-counting Results

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் கோரணபட்டு ஊராட்சி மொத்தம் ஒன்பது வார்டுகளை உள்ளடக்கியது. இதில், முதலாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகன், இந்திராணி, சீனிவாசன் ஆகிய மூன்று வேட்பாளர் போட்டியிட்டனர்.

இதனிடையே, வேட்பாளர் முருகன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி கடந்த இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், சதீஷ்குமார் தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

மறு வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்ற வேட்பாளர் முருகன்

அதில், முதலாவது வார்டில் மொத்தம் 331 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின், மறுவாக்கு எண்ணிக்கையில் சாவி சின்னத்தில் போட்டியிட்ட முருகன் 153 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்களான இந்திராணி 109 வாக்குகளும், சீனிவாசன் 56 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தலும் பதவியேற்பு பரிதாபங்களும்...!

Intro:குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் கோரணபட்டு ஊராட்சியில் 1 வது வார்டு மறுவாக்கு எண்ணிக்கை சாவி சின்னத்தில் போட்டியிட்டவர் வெற்றி
Body:கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கோரணபட்டு ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் முருகன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி கடந்த 2 ந் தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி,
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், சதீஷ்குமார் தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

கோரணபட்டு ஊராட்சியில், மொத்தம் 9 வார்டுகளை உள்ளடக்கியதாகும். பிரச்சனைக்குரிய 1வது வார்டு மொத்த வாக்குகளாக 331 வாக்குகள் பதிவாகி இருந்தன. இவற்றில் மூன்று வேட்பாளர் போட்டியிட்டனர்.


மறுவாக்கு எண்ணிக்கையில் சாவி சின்னத்தில் போட்டியிட்ட முருகன் 153 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

மற்ற வேட்பாளர்களான இந்திராணி 109 வாக்குகளும், சீனிவாசன் 56 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.