ETV Bharat / state

'விஜய்ரகு கொலைக்கு திருமாவளவன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?' - ஹெச். ராஜா

author img

By

Published : Jan 29, 2020, 10:29 AM IST

கடலூர்: பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

கடலூரில் ஹெச்.ராஜா பேட்டி
கடலூரில் ஹெச்.ராஜா பேட்டி

கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன. நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இந்தியாவை வன்முறைக் காடாக்கவேண்டும் என்பதில் முகமது அலிக்கும் ஈவெராவுக்கும் கருத்து ஒற்றுமை இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவின் பாலக்கரை செயலாளர் விஜயரகுவை கொலை செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட நபர் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர். இதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகுவின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். பட்டியிலினத்தைச் சேர்ந்த ரகு முஸ்லிம் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஏன் திருமாளவன் குரல் எழுப்பவில்லை.

கடலூரில் ஹெச்.ராஜா பேட்டி

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் அரசியல்வாதிகள் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும். தஞ்சை பெரிய கோயில் ஈவெரா காட்டியது கிடையாது; அது ராஜராஜ சோழன் கட்டியது. அங்கு ஆகம முறைப்படித்தான் குடமுழுக்கு நடைபெறும். ஆன்மிகவாதிகளை தவிர வேறு யாருக்கும் அது குறித்து பேசுவதற்குத் தகுதியில்லை. புதியதாகத் திறக்கப்படும் மசூதியில் அரபு மொழியில் ஓதக்கூடாது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும்" என்று கூறினார்.


இதையும் படிங்க:

‘ஸ்டாலின் ஜனாதிபதியா?’ - ஹெச்.ராஜா கிண்டல்!

Intro:திருச்சி விஜய் ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை இதன் மூலமாக அவர் தலித் விரோதியாக மாறி விட்டார் கடலூரில் பாஜக மூத்த தலைவர்எச் ராசா பேட்டி


Body:கடலூர்
ஜனவரி 28,

குடியுரிமைச் சட்டத்தை போர்வையாக பயன்படுத்தி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் வன்முறை காடாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் தேவையே இல்லாத அவசியம் இல்லாத ஒரு போராட்டத்தை நாடு முழுவதும் நடத்துகிறார்கள் ஏனென்றால் இந்த சட்டம் தெளிவா இருக்கு நாட்டில் ஒரு குடிமகனுக்கு கூட குடியுரிமை ரத்து செய்யப்படும் என அதில் இல்லை

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்த மூன்று நாடுகளில் அங்கிருந்து வாழ முடியாமல் இந்தியாவிற்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் அவர்களுக்கு குடியுரிமை தரோம்னு தான் இந்த சட்டம் சொல்லியிருக்கு இந்த சட்டத்துக்கு எதிராக போராட என்ன காரணம் அதாவது இந்த திமுகவும் முஸ்லிம் லீகும் முகமது அலி ஜின்னாவும் ஈவே ராமசாமி நாயக்கரும் ஒன்று தான் ஏனென்றால் முகமட் அலி ஜின்னாவுக்கு ஈவேரா ஒரு கடிதம் எழுதுகிறார் 42ல உங்களுடைய பாகிஸ்தான் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்னுடைய திராவிடஸ்தான் கோரிக்கையை நீங்க ஆதரிக்கும் ஆக இந்த தீய சக்திகளுக்கு பொதுவாக இந்தியாவை வன்முறைக் காடாக ஆகவேண்டும் இந்தியாவை சிதைத்து சின்னா பின்ன படுத்த வேண்டும் என்பதில் முகமது அலிக்கும் ஈவேராவுக்கும் கருத்து ஒற்றுமை இருக்கிறது.அந்த கடிதத்தில் அவர் ராமசாமி நாயக்கர் அப்படின்னு போட்டு இருக்கிறது அதனால அந்த கடிதத்தை ஏற்கனவே பொதுவெளியில் பிரசுரம் பண்ணியிருந்தேன்
அந்த லெட்டர் நான் என்னுடைய ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி அதை போட்டேன் காரணம் இவரை ஏதோ ஜாதியை ஒழித்து விட்டார் என்று சொன்னார் அவர் பெரியலேயே ஜாதியை ஒழிக்கல அந்த கடிதத்தில் அவர் ராமசாமி நாயக்கர் போட்டு இருக்கின்றார் அதனால அந்த கடிதத்தை ஏற்கனவே பொதுவெளியில் பிரசுரம் பண்ணி இருந்தேன் ஆகவே இந்த தீய சக்தி எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கு நான் என்ன கேட்கிறேன் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் சரியா பேப்பரோடு ஒழுங்கா இந்தியா வந்திருந்த நாம் குடியிருக்கும் தானே தரோம் அதுக்கு பெரிய உதாரணம் சோனியா காந்தி ஒரு பாரினரா வந்தார் ஐந்து வருடம் தங்கியிருந்து குடியுரிமை பெற்றார் யாருடைய குடியுரிமையும் நாம் ரத்து செய்யவில்லை ஆனால் வேண்டுமென்றே மதவாதத்தையும் கலவரத்தையும் தோன்றுகின்ற குறிக்கோளோடு ஒரு வழியை சேல்ஸ் பொலிடிகல் இன்டன்ஷன் அதன் காரணமாக இந்த போராட்டங்கள் நடத்தினால் இன்னைக்கு தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பில் இருந்துகொண்டிருக்கிறது

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொட்டிலாக தமிழகம் மாறிப்போயிருக்கிறது ஏனென்றால் சமீபத்தில் பெங்களூரில் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதுல ஒருத்தர் திருவள்ளூரில் பாடி சுரேஷ் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்து ஜாமீனில் வந்து தலைமறைவானர். அதே மாதிரி நாலு பயங்கரவாதிகள் டெல்லியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரகு கொலை வழக்கில் கைதான முகமது பாபு அவரை ஏன் மிட்டாய் பாபு என்று பெயரை மாற்றி போடுகிறீர்கள் அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை அவன் முஸ்லீம் என்று அடையாளத்தை ஏன் ஊடகம் மறைக்கிறது தமிழகத்தில் ஊடகம் நியாயமாக நடக்க மாட்டேங்கிறது ஊடக பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது ஒரு ஆளோட ஐடென்டிட்டி ஏன் நீங்க மறக்கணும் பொறுப்பற்ற தீய சக்தியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது திமுக அரசியல் களத்திலே செயல்படுவதற்கு எள் முனை அளவும் அருகதையற்ற ஒரு கட்சியாக மாறியிருக்கிறது. மாண்புமிகு உள்துறை அமைச்சர் தெளிவா சொல்லி இருக்கிறார். நாடு முழுவதும் சிஎஎக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் முன்னிலைப்படுத்தி நடத்தப்படுகிறது சிமி அல்உமா எஸ்டிபிஐ பிஎஃப் என பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது தமிழகத்திலும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என இந்த நேற்று பிஜேபி பகுதி செயலாளர் பாலக்கரை செயலாளர் விஜயரகுவ கொலை செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட நபர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ரகுவின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் இழப்பீடு அளிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்

ரஜினி பத்திரிக்கையில் வந்ததை பேசியிருக்கிறார் வாய மூடி சும்மா இருந்தால் அன்றே முடிந்திருக்கும் இப்ப என்ன ஆச்சு எல்லா பத்திரிகைகளும் ஈவேராவின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது ஊடகங்கள் நல்லா பண்ணி இருக்கிறது நான் பாராட்டுகிறேன் அதில் ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார் சேலம் மாநாட்டில் மாற்றான் மனைவி அபகரித்தால் குற்றமில்லை என்று சட்டத்தைத் திருத்த வேண்டும் ஆஹா எவ்வளவு பெரிய சீர்திருத்த வாதி இந்த சீர்திருத்தம் வந்தாள் இந்த உலகம் என்னவாகும் காட்டு மிராண்டியாக போகும் இந்த உலகம்.

மோகமத் பாபு முஸ்லிம் தானே இஸ்லாமிய கிரிமினல் தானே அப்புறம் என்ன ஐஜி அவர்கள் இதை பேசி இருக்கக் கூடாது அதுனால் தான் சொல்றேன் தவறான குறிப்பு இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் நீ இப்படித்தான் பண்ணனும்னு இண்டிகேட் பண்ணி இருக்காரு நான் சொன்னேனா அவரால் மறுக்க முடியுமா அது மட்டும் இல்ல நான் ஒரு சொல்றேன் அவர் கோயம்புத்தூரில் இருக்கும் பொழுதுதான் சசிகுமார் கொலை நடந்தது சசிகுமார் கொலையிலும் உங்கள மாதிரி ஊடகங்கள் இருக்கக்கூடிய இந்து அமைப்புகளுக்கு விரோதமாணவர்கள் இல்லை திமுக ஆதரவு மீடியா முழுவதும் என்ன விவாதம் பன்னீர்கள் இதே பொம்பள விஷயம் தானே பேசினீர்கள் ஆனால் என்ஐஏ யாரைக் கைது பண்ணியது முஸ்லிம் பயங்கரவாதிகள் தானே அமல்ராஜ் அவர்களின் முன் கணிப்பு செய்கிறார்கள் அது முறையில்லாத செயல் பேசியிருக்க கூடாது என்னா அவருடைய ஜூனியஸ் கல் தானே இன்வெஸ்டிகேஷன் பண்ண போறாங்க நீங்க இந்த மாதிரி தான் ரிசல்ட் கொடுக்கணும் என்று குறிப்பு சொல்ற மாதிரி இருக்காது இது நாயமா இருக்கும்.

சுவாமி சச்சிதானந்தா ஒரு இந்து ஆன்மீகவாதி காங்கிரஸ் கட்சியில் இருந்த இளைய பெருமாள் அவருடைய விசுவாசி திருமாவளவன் அவர்கள் முஸ்லிம்கள் சொன்னார்கள் என்று அம்பேத்கர் சிலையை எடுத்தவர்கள் தலித் சமுதாயத்தின் விரோதி எதிரி இன்னைக்கு ரகு விஷயத்தில் வாய்மூடி இருக்க காரணம் அவர் ஒரு ஆண்டி தலித் ஆகவே அவர் பேசப்படவில்லை. முஸ்லிம்கள்லால் ஒரு தலித் கொல்லப்பட்டிருக்கிறார் இன்னேரம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அது அவர் வாய்திறந்து இருக்க வேண்டுமே ரகு கொலை செய்யப்பட்டதை ஏன் அவர் கண்டிக்கவில்லை அவர் தலித்துக்கு நண்பர் இல்லை விரோதி தான்.

டிஎன்பிசி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் அரசியல்வாதிகள் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு ஆகம முறைப்படி நடக்கும் ஆன்மீகவாதிகளை தவிர வேற யாரும் பேசுவதற்கு ஒன்றுமில்லை மசூதி புதுசா தொறக்குறாங்க அரபு மொழியில் நாங்கள் ஓதக்கூடாது ஸ்டாலின் அறிக்கை கொடுக்க ஸ்டாலின் முதுகெலும்பு இருக்கு ஆகம முறைப்படி தான் நடக்கும் தஞ்சை பெரிய கோயில் ஈவேரா காட்டியது கிடையாது ராஜராஜசோழன் கட்டியது.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.