ETV Bharat / state

கடலூர் அருகே சிவன் கோயிலில் தங்கம், வெள்ளி திருட்டு - போலீஸ் விசாரணை

author img

By

Published : Jan 8, 2023, 9:07 PM IST

கடலூரிலுள்ள சிவாலயத்தில் இருந்த இரண்டு வெள்ளி கிரீடங்கள், தங்கத்தினால் ஆன தாலி உள்ளிட்டவற்றை திருடன் திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சிவன் கோயிலில் தங்கம் வெள்ளி திருட்டு

கடலூர் திருப்பாதிரிபுலியூர் ஜவான்பாவன் சாலையில் காசி விசாலாட்சி உடனுறை விஷ்வநாதீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. நேற்று இரவு (ஜன.07) பூஜைகள் முடிந்து கோயிலை மூடிவிட்டுச் சென்ற நிலையில் கோயில் பூசாரி இன்று (ஜன.08) காலை கோயிலைத் திறந்தார்.

பின்னர், உள்ளே நுழைந்தபோது கோயில் கருவறையின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர், நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். அதில், முகமூடி அனிந்த திருடன் கோயில் உள்ளே புகுந்து தங்கத்தினால் ஆன தாலி, 2 வெள்ளி கீரிடங்கள், சில வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. கோயில் பூசாரி கொடுத்தப் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சிறுவன் கூறிய காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.