ETV Bharat / state

'திமுகவிற்கு ஓட்டுப்போடுவதும்; குரங்கிற்கு கோட்டுப்போடுவதும் ஒன்றுதான்!'

author img

By

Published : Apr 3, 2021, 6:01 AM IST

திமுகவிற்கு ஓட்டுப்போடுவதும், குரங்கிற்கு கோட்டுப்போடுவதும் ஒன்றுதான் என அதிமுக வேட்பாளர் எம்.சி. சம்பத்துக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நடிகை விந்தியா கூறியுள்ளார்.

actress vindhya election campaign for admk in cuddalore
actress vindhya election campaign for admk in cuddalore

கடலூர்: கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.சி. சம்பத்தை ஆதரித்து திரைப்பட நடிகையும், அதிமுக பேச்சாளருமான நடிகை விந்தியா திருப்பாதிரிப்புலியூர் தேரடித் தெருவில் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்களும், ஏழைக் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்கதாக ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1500, இலவச கேபிள் டிவி, சலவை இயந்திரம், முதியோர் உதவித்தொகை எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவை அனைத்தும் வெற்றிபெற்றவுடன் உங்களுக்கு நிறைவேற்றித் தருவார்” என்று கூறினார்.

நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை

'ஸ்டாலின்தான் வருவாரு; மக்களே உஷார்' என்று கிண்டலடித்த அவர், குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பதவியைப் போட்டுக்கொடுத்துவிட்டு வரும் திமுகவிற்கு ஓட்டுப் போடுவதும், குரங்கிற்கு கோட்டுப் போடுவதும் ஒன்றுதான் என்று பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.