ETV Bharat / state

இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும்- சத்குரு

author img

By

Published : Jan 13, 2021, 1:33 PM IST

படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Youngsters should promote natural agriculture- Satguru
Youngsters should promote natural agriculture- Satguru

கோவை: பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் என்பது வெறும் உணவுப் பொருள் அல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடுகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்நாளில், படித்தவர்களும் இளைஞர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

நீங்கள் விரும்பினால் ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் உங்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அதை கற்றுக்கொண்டு நீங்கள் கிராமத்திற்கு சென்று குறைந்தப்பட்சம் 10 பேருக்காவது கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் நாட்டில் ஒரு பெரும் புரட்சியே நடந்துவிடும்.

அதுமட்டுல்ல, நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்க வேண்டும். நம் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் முக்கியமானதாகும்.

நம் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை கொண்டு வந்து உணவை சத்துமிக்க உணவாக மாற்ற வேண்டும். மண்ணை சத்தான மண்ணாக வைத்துகொள்ள வேண்டும். இயற்கையை நல்ல நிலையில் வைத்து கொள்ள இயற்கை விவசாயம் மிக தேவையானது. மேலும், பொருளாதாரத்தில் உழவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

ஆகவே, இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் உறுதியை தமிழ் மக்கள் அனைவரும் இந்த பொங்கல் திருநாளில் எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் இந்த உறுதியை கட்டாயம் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.