ETV Bharat / state

மருதமலை அடிவாரத்தில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை!

author img

By

Published : Aug 16, 2020, 3:08 PM IST

கோயம்புத்தூர்: மருதமலை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, வாயில் பலத்த காயத்துடன் உணவு உட்கொள்ள முடியாமல் சுற்றி வருகின்றது. அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தொடரும் மனித தவறுகள்: பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை!
தொடரும் மனித தவறுகள்: பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை!

கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை ஒன்று வாயில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (ஆக. 15) மாலை முதல் யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் அந்த யானை, உணவு உட்கொள்ள முடியாமல் இருக்கின்றது. காயம் அடைந்த காட்டு யானையை வனத்துறை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

பழங்களில் மருந்துகள் வைத்து யானையின் புண்ணை சரி செய்வதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் 17 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த யானையை காப்பாற்ற வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடரும் மனித தவறுகள்: பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை!

மேலும், யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது குறித்தும் வனத்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...அமெரிக்கா டூ துளசேந்திரபுரம்; கமலா ஹாரிசின் வேர்களை நோக்கிய பயணம் இது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.