ETV Bharat / state

500, 1000 என சொல்லியும் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பிற்கு செல்வது ஏன்?

author img

By

Published : Jun 4, 2022, 5:24 PM IST

ரூ. 500, 1000 என சொல்லிய அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பிற்கு செல்லும் நீங்கள், உங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

500, 1000 என சொல்லியும் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பிற்கு செல்வது ஏன்?  - செந்தில்பாலாஜி கேள்வி
500, 1000 என சொல்லியும் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பிற்கு செல்வது ஏன்? - செந்தில்பாலாஜி கேள்வி

கோயம்புத்தூரில் ரூ.113 கோடி மதிப்பில் காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலிரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் சாலை அமைப்பு, விரிவாக்கம், அகலப்படுத்துதல், நகர்புற கட்டடங்கள் அமைக்கும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூன் 4) தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, லாலிரோடு உழவர் சந்தை அருகில் மருதமலை - வடகோவை சாலையில் சாலை அகலப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “கோயம்புத்தூர் மாநகராட்சியில் 53 இடங்களில் நகர் நல மையங்களுக்கு கட்டடம் (தலா 25 லட்சம் மதிப்பில்) கட்டும் பணிகள், 10 மையங்களின் புரணமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. 32 கிமீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்பு பணிகள் அகலப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தை பொறுத்தவரை 1,132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 800 கோடி ரூபாய் செலவில் நிலங்கள் பெறப்பட்டுள்ளது.

500, 1000 என சொல்லியும் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பிற்கு செல்வது ஏன்? - செந்தில்பாலாஜி கேள்வி

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10 ஆண்டுகளுக்கான வரைவு திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதேநேரம் நிதி ஆதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை சாலை விரிவாக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. இங்கு முடிக்கப்பட்ட பாலங்கள் விரைவில் திறக்கப்படும்.

தூத்துக்குடி அனல்மின் நிலைய நிலக்கரி விவகாரத்தில் அண்ணாமலை தெரிவித்ததற்கு அன்று மாலையே நான் பதில் அளித்தும், பத்திரிகையாளர்கள் ஏன் அவரிடம் கேள்வி கேட்கவில்லை? நான் கூறும் கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் என்னிடம் கேட்கலாம். ரூ.500, 1000 என சொல்லியும் பத்திரிகையாளர்கள் அவரது செய்தியாளர் சந்திப்பிற்கு செல்கிறீர்கள்.

உங்கள் மீதே அவதூறு பரப்புகின்றனர். அப்போது அனைவரும் அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? அவர்கள் முன்வைக்கக்கூடிய அவதூறுகளுக்கு ஆதாரம் இருந்தால் நாம் பதில் சொல்லலாம், இல்லையென்றால் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக அண்ணாமலை மீது காவல்துறையிடம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.