ETV Bharat / state

’ரஃபேல் வழக்கில் கற்பனைக் கதைகளை கட்டுவதை காங்கிரஸ் தவிர்க்கணும்’ - வானதி சீனிவாசன்

author img

By

Published : Nov 16, 2019, 4:42 PM IST

கோவை: ரஃபேல் வழக்கில் இனியாவது கற்பனைக் கதைகளை கட்டுவதை காங்கிரஸ் கட்சி தவிர்க்க வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

vanathi srinivasan pressmeet

உள்ளாட்சித் தேர்தலுக்கான பாஜக சார்பில் போட்டியிட விரும்பவர்களுக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இதனைத் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தார். பல பாஜக தொண்டர்கள் ஆர்வமுடன் தங்களுடைய விருப்ப மனுக்களை அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புகளையே உச்ச நீதிமன்றம் வழங்கி வருகிறது என்றும் ரஃபேல் விமான வழக்கில் காங்கிரஸ் இனிமேலாவது கற்பனைக் கதைகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், சபரிமலை விவகாரத்தில் பெண்கள் அக்கோயிலின் புனிதத்தை காக்க வேண்டும் என்றும் தற்போது தமிழ்நாட்டில் பாஜக உத்வேகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த நடிகை கவுதமி!

Intro:கோவை பாஜக அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் தருதல் துவக்கம்Body:உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வின் விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படுகின்றன.

இதனை தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். பலரும் விருப்ப மனுக்களை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புகளையே உச்ச நீதிமன்றம் வழங்கி வருவதாகவும், ரபேல் விமான வழக்கில் காங்கிரஸ் இனிமேலாவது கற்பனை கதைகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சபரிமலை விவகாரத்தில் பெண்கள் அக்கோவிலின் புனிதத்தை காக்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது பாஜக உத்வேகம் பெற்றுள்ளதாகவும் அதனால் வெற்றி உறுதி எனவும் கூறினார். மேலும் ரஜினி பாஜகவில் இணைவாரா என்று கேட்டதற்கு அது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என்று கூறிவிட்டார்.

மேலும் கோவியில் அதிமுக கொடிமரம் சாய்ந்து பாதிக்கப்பட்ட அனுராதாவிற்கு அரசு நிதி நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தானாலும் கிரிமினல் சட்டத்தில் இருந்து தப்பிக்க வழியில்லாத வகையில் தமிழக அரசு அந்த வழக்கில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.