ETV Bharat / state

பவானி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 மாணவர்கள் சடலமாக மீட்பு!

author img

By

Published : Oct 31, 2022, 10:07 PM IST

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

Bhavani river  students washed away  coimbatore news  coimbatore latest news  students drown in river  drown and death  ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 மாணவர்கள்  நீரில் மூழ்கிய மாணவர்கள்  கோயம்புத்தூர் செய்திகள்  நீரில் மூழ்கி மாணவர்கள் பலி  பவானி ஆற்றில் அடித்துச்சென்ற மாணவர்கள்
நீரில் மூழ்கிய மாணவர்கள்

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்கச்சென்ற 10 கல்லூரி மாணவர்களில், கணிஷ்க் (24), ராஜதுரை (24), சுரேந்திரன் ஆகிய 3 பேர் நேற்று (அக்டோபர் 31) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் டேங்க் அருகே ராஜதுரை உடலையும், வெள்ளிப்பாளையம் இரண்டாம் பவானி துணை மின் நிலையம் அருகே கணிஷ்க் ஆகியோரது உடலும் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் சுரேந்திரன் என்ற மாணவனின் சடலமும் குத்தாரிபாளையம் அருகே மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட மூவரின் உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர், அவர்களது உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மோர்பி பால விபத்தில் பெற்றோரை இழந்த நான்கு வயது குழந்தை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.