ETV Bharat / state

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை - கி.வீரமணி..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 3:43 PM IST

K.Veeramani Byte: கோயிலை நம்பி வாக்குகளைப் பெறத் தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டு இருப்பதாகக் கோவையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

there is no need to announce prime ministerial candidate in india alliance said k veeramani
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை - கி.வீரமணி..

கோயம்புத்தூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கோவை வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவிநாசி சாலையில் உள்ள ரெசிடண்சி ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோயிலை நம்பி வாக்குகளைப் பெறத் தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டு இருக்கிறார்.

அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட்டணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. நாடாளுமன்ற பிரச்சனையில் பிரதமர் வாய் திறக்கவில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் நடந்த பேரிடரைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், குஜராத் போன்ற மாநிலங்களுக்குச் சிறிய பிரச்சனை என்றாலும் கூட ஆயிரம் கோடியை வழங்குகிறார்.

ஆகவே, எந்த வகையிலும் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால், பக்தி யாத்திரையின் மூலமாகத் தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து மீண்டும் வெற்றி பெறலாம் என இறுதியாக ராமரை நம்பி இருக்கிறார். அதனால் தான், அவசர கதியில் ராமன் கோயிலைக் கட்டி திறக்க இருக்கிறார். இதுவரை இந்தியா மட்டுமல்ல, எந்த நாட்டிலும் கோயிலுக்காகப் பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனைத் திறந்து வைத்து யாரும் பார்த்தது இல்லை.

இந்திய அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு இல்லை. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தான் உண்மையான ஜனநாயகம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை குறித்துப் பேசிய அவர், "ஆளுநர் எப்படி நடந்துகொள்கிறார் என மக்கள் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு.

அரசியல் அமைப்பு சட்டம் 162-ன் படி ஆளுநர் மாநில அரசின் ஒரு பகுதி மட்டுமே. ஒருவர் மீது அரசு வழக்குப் போட்டுள்ள போது, இவர் அருகிலேயே செல்லக் கூடாது. துணை வேந்தர் வழக்கு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது, குறிப்பாகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ள போது, ஆளுநர் செல்கிறார், விசாரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம். அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் மாற்றவும், அதனை மறைப்பதற்காகவும் தான் போகிறார்.

இதனை அதிகாரிகள் பார்க்கும் போது, ஆளுநரே அவருடன் இருக்கிறார் என அச்சப்படுவார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது. பல குற்றங்களை அடுக்கடுக்காக செய்து கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி இதிலும் தனது சுய உருவத்தைக் காட்டி, பாஜக அரசியலை இதிலும் நடைமுறைப்படுத்துகிறார். இதன் காரணமாகத் தான் மாணவர்கள் இன்று அவரை எதிர்த்து, மாணவர்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள், தடா, பொட சட்டம் போலக் கொடுமையானது. இது மனித உரிமைகளைப் பறிப்பதில் முக்கியமான ஒன்று. காலணி சட்டங்களைப் போக்கி புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அதை விடக் கொடுமையான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்குமா என கேள்வி எழுந்தாலும், அதே நேரத்தில் நாடு முழுவதும் வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலையில் போலீசார் திடீர் சோதனை.. ஆளுநர் வருகையொட்டி அதிகரிக்கும் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.