ETV Bharat / state

சிறுமியை கண்டுபிடிக்க உதவினால் சன்மானம்- சூலூர் காவல் துறை அறிவிப்பு

author img

By

Published : Oct 10, 2019, 9:09 AM IST

கோவை: காணாமல்போன ஐந்து வயது சிறுமி குறித்த தகவல் அளிப்போருக்கு உரிய சன்மானம் அளிக்கப்படும் என சூலூர் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

soolur police gives announcement for finding five years old child

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் கவிதா தம்பதிக்கு வெற்றிவேல் என்ற மகனும் சாமினி என்ற ஐந்து வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை, வீட்டின் அருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென மாயமானார். இது குறித்து புகாரின்பேரில் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையைத் தேடிவருகின்றனர்.

காணாமல்போன குழந்தை குறித்த எவ்வித தகவல்களும் காவல் துறையினருக்குத் கிடைக்காத நிலையில், சூலூர் காவல் துறையினர் சிறுமியின் அடையாளங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துவருகின்றனர்.

மேலும், சிறுமி குறித்த தகவல் அளிப்போருக்கு உரிய சன்மானம் அளிக்கப்படும் எனவும் அவர்கள் அளித்த தகவல்களின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

soolur police gives announcement for finding five years old child
சிறுமியின் புகைப்படத்துடன் கூடிய அடையாள துண்டுப்பிரசுரம்

மேலும், சிறுமி குறித்த தகவல் அளிப்போர் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், சூலூர் காவல் நிலைய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம்!

Intro:காணாமல் போன 5 வயது சிறுமியை பற்றி தகவல் கொடுத்த தக்க சன்மானம் அளிக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு - காணவில்லை புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரச்சுரம் விநியோகம்Body:கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.(36). இவரது மனைவி கவிதா.இவர்களுக்கு வெற்றிவேல் (7) என்ற மகனும் சாமினி என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.ஜெயக்குமார் அவரது மனைவி கவிதா அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென மாயமானார்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வருகின்றனர்.
குழந்தை காணவில்லை புகாரில் போலிசார் விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுப்பட்டும் சிறுமியை கண்டுப்பிடிக்க முடியாத சூழ்நிலையில் சூலூர் காவல்துறை சார்பாக துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன சிறுமியை பற்றிய தகவல் கொடுப்பவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் மேலும் தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறை உறுதியளித்து பொதுமக்கள் கூடும் பகுதிகளில் சிறுமி புகைப்படத்துடன் கூடிய அங்கு அடையாளத்துடன் போஸ்டர்களும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு வருகின்றன மேலும் துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர் கள் மற்றும் சூலூர் காவல் நிலைய தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது தகவல் கொடுக்கும் நபர்கள் இந்த எண்ணை அலைத்து தகவல் கொடுக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.