ETV Bharat / state

சூரப்பாவை பணிநீக்கம் செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டம்!

author img

By

Published : Oct 16, 2020, 3:25 PM IST

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

sfi Demonstrate besieging the covai Collector Office for anna university issue
sfi Demonstrate besieging the covai Collector Office for anna university issue

கோயம்புத்தூர்: அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க கூடாது, உயர் கல்வி சிறப்பு நிறுவனம் என்ற முடிவை கைவிடுவதுடன் மத்திய அரசு நெறிமுறைகளை ஏற்கக் கூடாது, மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பல்வேறு கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஆட்சியரிடம் வழங்கி, மாணவர் சங்கத்தினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.