ETV Bharat / state

யோகாசனத்தில் உலகச் சாதனைபுரிந்த பொள்ளாச்சி பள்ளி மாணாக்கர்

author img

By

Published : Feb 28, 2020, 6:26 PM IST

கோயம்புத்தூர்: பத்து நிமிடத்தில் அதிக யோகாசனங்களைச் செய்து பொள்ளாச்சி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

school students yoga record
pollachi school students yoga record

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி எல்.எம்.எஸ். தனியார் பள்ளி மாணவர்கள் யோகா ஆசிரியர் உடுமலை குணசேகரன் தலைமையில் 104 மாணவர்கள் ஒன்றாகப் பத்து நிமிடத்தில் 31 யோகாசனங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பள்ளி வளாகத்தில் ரெக்கார்ட்ஸ் அமைப்பு மாணவர்களின் உலக சாதனை நிகழ்ச்சியை அங்கீகரிக்கப் பதிவுசெய்தது, இதில் 104 மாணவர்களும் ஒரே மாதிரியாக பத்து நிமிடத்தில் 31 யோகாசனங்கள் செய்து உலகச் சாதனை நிகழ்த்தினார்கள், இதுவரை அதிகபட்சமாக 26 யோகாசனங்கள் செய்ததே உலகச் சாதனையாக இருந்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்து நிமிடத்தில் 31 யோகாசனங்கள் செய்து சாதனை

யோகாசனத்தில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: சீரமைக்கப்படும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.