ETV Bharat / state

‘தனிநபர் கழிப்பிடம் கட்டித்தர நிதி ஒதுக்க வேண்டும்’ - பொள்ளாச்சி எம்பி கோரிக்கை!

author img

By

Published : Jan 19, 2021, 6:48 PM IST

கோவை: தமிழ்நாட்டில் 37 சதவீத மக்களுக்கு இதுவரை தனிநபர் கழிப்பிடம் கட்டி தரப்படவில்லை, அதனால் அதற்கான நிதியை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டும் என பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.

‘தனிநபர் கழிப்பிடம் கட்டித்தர நிதி ஒதுக்க வேண்டும்’ -பொள்ளாச்சி எம்பி கோரிக்கை!
‘தனிநபர் கழிப்பிடம் கட்டித்தர நிதி ஒதுக்க வேண்டும்’ -பொள்ளாச்சி எம்பி கோரிக்கை!

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நெகமம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாமை பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். இந்த விழிப்புணர்வு முகாம் மூலமாக தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கிராமப்புற மக்களுக்கு சுகாதாரம் மற்றும் குப்பை இல்லாத ஊராட்சியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது பேசிய மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், “தனிநபர் கழிப்பிடம், குப்பை இல்லாத நகரங்கள் அடிப்படையில் பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கு அதிக நிதியை ஒதுக்கி தர வேண்டும்.

‘தனிநபர் கழிப்பிடம் கட்டித்தர நிதி ஒதுக்க வேண்டும்’ -பொள்ளாச்சி எம்பி கோரிக்கை!

இந்திய அரசாங்கத்தின் புள்ளியல் துறை அமைச்சகத்தின் தகவல் அடிப்படையில் தமிழ்நாட்டில் 37 சதவீத மக்களுக்கு இன்றைக்கும் கழிப்பிடம் கட்டி தரப்படவில்லை. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய, மாநில அரசாங்கம் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கி தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாடு அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.