"அயோத்தி ராமர் கோயில் விவகாரம் - திமுக பேசுவதை மக்கள் புறக்கணிப்பார்கள்" - எல்.முருகன்!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 18, 2024, 5:42 PM IST

மத்திய இணை  அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Union Minister of State L.Murugan: அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் திமுக பேசுவதை மக்கள் புறக்கணிப்பார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் திமுக பேசுவதை மக்கள் புறக்கணிப்பார்கள் - எல்.முருகன்!

கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, விமான நிலையம் வந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது.

நாளை (ஜன.19) சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். நாளைய தினம் ஒரு முக்கிய நிகழ்வாக டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட உள்ளது. அதனை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாகவும் இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டு கால கனவு, எண்ணம், தியாகங்கள் எல்லாம் நிறைவேறி ஒவ்வொரு இந்திய பிரஜையும் பாரத தேசத்தினரும் எதிர்பார்க்கின்ற திருவிழாவை கொண்டாடை தயாராக இருக்கின்றனர்.

இதில் திமுகவினர் இன்னும் பிற்போக்கு தனத்துடன் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் புறக்கணிப்பார்கள். நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். தமிழகத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தோனி மீதான அவதூறு வழக்கு : ஜன. 29ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.