ETV Bharat / state

மக்கள் பயத்தில் உள்ளார்கள்... கோவையைக்காப்பாற்றுங்க - எஸ்.பி.வேலுமணி

author img

By

Published : Oct 27, 2022, 7:55 PM IST

கோவை மக்கள் 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்து விடுமோ பயத்தில் உள்ளனர் எனவும்; மக்களைப் பாதுகாக்கும் வேலையை காவல்துறை பார்த்து, கோவையைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மக்கள் பயத்தில் உள்ளார்கள் எஸ்.பி.வேலுமணி
மக்கள் பயத்தில் உள்ளார்கள் எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக‌ சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “தற்போது கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் பயத்தில் உள்ளனர். 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இவ்விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களினால் 20 ஆண்டுகள் வளர்ச்சி பின்நோக்கிசென்றுள்ளது.

ஆனாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உளவுத்துறை ஐ‌ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் எந்த வேலையும் பார்க்கவில்லை. உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இவர்கள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே செய்கின்றனர். இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த மதத்தையும் ஒதுக்கக்கூடாது. கோவை மக்கள் அமைதியை விரும்புகிறோம். கோவை குண்டு வெடிப்பு பாதிப்புகள் இன்னும் உள்ளது. இரு சமூகமும் பாதிக்கப்பட்டது. முதலமைச்சருக்கு பணம் வாங்கித் தரும் வேலையை மட்டும் ஜஜி டேவிட்சன் தேவாசீர்வதம் செய்துவருகிறார். மக்களைப் பாதுகாக்கும் வேலையை காவல் துறை பார்க்க வேண்டும். கோவையைக் காப்பாற்ற வேண்டும்” எனத்தெரிவித்தார்.

எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி

முன்னதாக பேசிய அவர், “கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த 10 கோரிக்கைகள் கூட்டத்தில் பங்கேற்றோம். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி பாதி தான் வந்துள்ளது. நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும். கோவையில் எல்லா சாலைகளும் பழுதடைந்துள்ளன. சாலைகளை செப்பனிட வேண்டும்” எனக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்: கிடைத்தது மத்திய அரசின் அனுமதி; வழக்குப்பதிந்த என்.ஐ.ஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.